செய்திகள் :

ஜோ பைடனை விமர்சித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்! தேசிய மருத்துவர் அமைப்பு!

post image

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் அமராவதியில் நவ. 16 ஆம் தேதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது’’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ராகுலின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்திக்கு தேசிய மருத்துவர் அமைப்பு பாரத் (National Medicos Organisation Bharat) கடிதம் எழுதியுள்ளது.

கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, ``ஒரு பொது மேடையில் தலைவர்கள் குறித்த இதுபோன்ற அறிக்கைகளோ விமர்சனங்களோ, தவறான தகவல்களை நிலைநிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் புரிதல், சிகிச்சை மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.

அமெரிக்க அதிபர் பைடனின் அறிவாற்றல் திறன்களை இழிவுபடுத்துபோல் வெளிப்பட்ட ராகுல் காந்தியின் கருத்துக்கள் கவலையை அளிக்கிறது.

இதையும் படிக்க:இந்தியாவுடனான உறவு அதானி விவகாரத்தை தொடர உதவும்! வெள்ளை மாளிகை

தன்னை விட மூத்தவர் மற்றும் வயதான அரசியல் தலைவர் குறித்து ராகுல் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இந்திய கலாசாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதியற்ற தன்மையைக் குறிக்கின்றன.

இது தனிநபர் மீதான தனிப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; இந்தியாவில் சுகாதார சவால்களை எதிர்த்து வாழும் எண்ணற்ற மூத்த குடிமக்கள் மீதான அவமரியாதை.

உங்கள் மீதும் கூட இதுபோன்று உடல்நிலை குறித்த வதந்திகள் சில சமயங்களில் வந்திருக்கும். ஒரு தனிநபர் மீது இவ்வாறான கருத்துகள் சமூகத்தில் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே, தனது கருத்துகளைப் பற்றி ராகுல் சிந்திக்க வேண்டும்; மேலும், அவர் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற கருத்துகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் ஆயுதப்படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!

மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “இன்று(நவ.22), நாங... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பழைய கண்ணிவெடி பாதுகாப்பாக அகற்றம்

ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்தனர்.ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் புல்புர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வியாழ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 2 மீனவர்கள் மாயம்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கோவா கடற்கரையில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மர்தோமா என்ற படகில் இந்திய மீ... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?

தற்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக போலி வேலைவாய்ப்புகளை அறிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை ... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச மின்சாரம்! கேஜரிவால் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அடுத்தாண்டு நடைபெறும் தில்லி பேரவைத் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.தில்ல... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெய்ப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பி... மேலும் பார்க்க