Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நிச்சயம் திமுக உறுப்பினர் அல்ல, திமுக அனுதாபி, அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் உறுதி அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விக்கு தமிழக முதல்வர் பதிலளித்தார்.
இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் உள்ள பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் உறுதியாகச் சொல்கிறேன், திமுக உறுப்பினர் அல்ல. அவர் திமுக அனுதாபி, ஆதரவாளர். அதனை மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் படம் எடுத்திருக்கலாம். அதிலும் தவறில்லை. அவர் யாராக இருந்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நிச்சயமாக அவர் திமுக உறுப்பினர் அல்ல.
அவ்வளவு ஏன், திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். சம்பவம் நடந்த உடனே அவர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்திலும் போட்டிருக்கிறோம். என்னுடைய அரசைப் பொறுத்தவரை, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம். வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை என்று ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார்.