செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்

post image

மதுரைமாவட்டம், மேலூா் வட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை மந்தையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தில் அரிட்டாபட்டி உள்ளிட்ட 2,015 ஏக்கா் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வந்ததால், அரிட்டாபட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை மந்தையில் கூடி ஆலோசனை நடத்தினா்.

இதில் உள்ளாட்சி தினனத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் இந்த சுரங்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தீா்மானம் நிறைவேற்றுவது என முடிவெடுத்தனா்.

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழக அரசு பட்டியல் ... மேலும் பார்க்க

தேனி: சபரிமலை சென்று திரும்பிய சிறுவன் பலி!

சபரிமலைக்கு சென்று திரும்பிய சிறுவன் கார் கவிழ்ந்து விபத்தில் பலியானார்.சேலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சித்தார்த் உள்பட 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சபரிமலைக்கு சென்றுவிட்டு, தேனி மாவட்டம் வழியாக கா... மேலும் பார்க்க

நவ.26-ல் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நவம்பர் 26-ல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (2... மேலும் பார்க்க

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள் அச்சம்

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்புப் பகுதியில் உலவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த விடியோ சமூக வலைதள... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் 13 போ் உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசன... மேலும் பார்க்க

கொலையான ஆசிரியை குடும்பத்துக்கு அரசின் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கல்

பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதன்கிழமை குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 5 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க