செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: நன்றி தெரிவித்த அண்ணாமலை-குற்றம்சாட்டிய சு.வெங்கடேசன் எம்.பி.

post image

அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டியுள்ள மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்

மதுரை மேலூர் தாலுகா அரிட்டாப்பட்டி உள்ளடங்கிய பல கிரமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசின் கனிமவளத் துறை கடந்த 7.11.2024 இல் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியது. உயிர்பன்மைய முக்கியத்துவம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பகுதியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்புக்குள்ளாகும் என்னும் வகையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாசார பகுதியை பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மீதம் உள்ள 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஆராய வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு, அதுவரை ஏலதாரருக்கு ஒப்பந்தக் கடிதம் தருவதை தமிழக அரசு நிறுத்தி வைக்க வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அதாவது, மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு மதுரை மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே பிரதமர் மோடி முடிவுகள் மேற்கொள்வார் என்பது இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அண்ணாமலையின் மீது குற்றம்சாட்டியுள்ள மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்

இதையும் படிக்க |டங்ஸ்டன் சுரங்க இடம் மறுஆய்வு: நடந்தது என்ன? மத்திய அரசு அறிவிப்பு

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் கனிமவள அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உயிர்பன்மையம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஆராய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை மாநில அரசு இந்தத் திட்டத்திற்கான அடுத்தகட்ட அனுமதி சார்ந்த நடவடிக்கைகளை இடைக்காலமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாச்சார பகுதியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு மூலம் இந்தப் பகுதியை தவிர்த்து மீதம் உள்ள 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவாக்கியுள்ளது.

மேலும், வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாயந்த புராதானச் சின்னங்களை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கும். எனவே இந்த திட்டத்தை முழுமையாக கைவிடுவதே சூழலை பாதுகாக்கும்.

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம்.அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி, பாதுகாக்கப்பட்ட பகுதியில் வரக்கூடிய சுரங்கத்தை மட்டும் கைவிடுவது நோக்கமல்ல. ஒட்டுமொத்த திட்டத்தையும் கைவிட வேண்டும்.

மத்திய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும் என சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சுனாமி நினைவு நாள்! 20 ஆண்டுகளாக மறையாத துயரம்!!

தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது.தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பலரும் அடுத்த நாளின் விடியல் தங்களுக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்ப... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இன்றும் நாளையும் மழை பெய்யும்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்... மேலும் பார்க்க

சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச் செடிகள்!

திண்டுக்கல் மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச் செடிகள் சென்னையில் அடுத்த வாரம் தொடங்கும் மலா்க் கண்காட்சிக்காக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ள... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது

நாடு முழுவதும் இணையவழியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களிடம் ரூ.4.25 கோடி: ஜிஎஸ்டி மோசடி; பெண் கைது

வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டிக்காக பணத்தை பெற்றுக் கொண்டு ரூ.4.25 கோடியைச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.திருவள்ளூர் அருகே வேப்பம்பட்ட... மேலும் பார்க்க

வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழ... மேலும் பார்க்க