செய்திகள் :

டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கப்படுகிறதா?

post image

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு முறையில் பில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதும், மது விற்பனையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மோசடிகள் குறையும் என அறிவிப்புகள் தெரிவித்தன.

சரி இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட 15 நாள்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் சொல்வது என்னவென்று கேட்டால், தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லி, டாஸ்மாக் ஊழியர்கள் சரியான பில்லை வழங்குவதில்லை என்கிறார்கள். இதனால், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்கதையாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதுபோல, செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்டப் பகுதிகளில் பில் கேட்பவர்கள் கிட்டத்தட்ட 5-8 நிமிடங்கள் காக்கவைக்கப்படுகிறார்கள். ஒரு பாட்டில் வாங்கினாலும் சரி.

இதனால், வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில வேளைகளில் பில் போடப்படும் தொகையை விட வாங்குவது அதிகமாக இருப்பது குறித்தும் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட தொகை போட்டுத்தான் பில் வருகிறது. ஆனால் ஊழியர்கள் கேட்பது அதிகத் தொகை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

இன்னும் சில டாஸ்மாக் கடைகளில் பில் கேட்டால் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள் அல்லது பில் வரவில்லை என்று சொல்லிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

க்யூஆர் கோடு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். ஆனால் எதுவும் மாறவில்லை. பில்லு கிடைக்கவில்லை என்கிறார் கையில் ஒரு குவார்ட்டர் பாட்டிலுடன் மதுப்பிரியர்.

சில வேளைகளில், பில் பாடுவதற்காக காகிதச் சுருல்கள் இல்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு என்றும் வகை வகையாகக் காரணம் கூறுவதாகவும் புகார் வந்துள்ளது.

இது பற்றி டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டால், முக்கிய விற்பனை நேரங்களில் அதிக பில்களை தொடர்ந்து போடும்போது தொழில்நுட்பக் கோளாறு அல்லது மெத்தனம் ஏற்படுகிறது. இதனால், கூட்டத்தை சமாளிக்க முடிவதில்லை. பில் வேண்டாம் என்று மதுபானம் கேட்பவர்களுக்குக் கொடுத்தால், பில் கேட்டவர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், க்யூஆர் கோடு ஸ்கேனர்கள் சில வேளைகளில் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. இது விரைவில் சரி செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

அதிக பிரச்னை வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து விளக்கங்கள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் இரவு மற்றும் விடுமுறை காலங்களிலும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்க டாஸ்மாக் நிா்வாகம் முடிவு செய்து, இதற்காக ரூ.294 கோடி ஒதுக்கியது..

இதையடுத்து, பல்வேறு கட்டப் பணிகளைத் தொடங்கி தொழிற்சாலைகளில் மது உற்பத்தியாகி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு, குடோன்களின் வைக்கப்பட்டு, பின்னா் கடைகளுக்கு வந்து விற்பனையாகும் வரை, அதாவது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து தரவுகளையும் க்யூஆா் கோடு மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கடைகளிலும் இந்த வசதியைக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கிய நிலையில், முதல்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் கோவை வடக்கு, வடசென்னை ஆகிய இடங்களிலுள்ள 266 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் இந்த டிஜிட்டல் முறையில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் நவ.14 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பி... மேலும் பார்க்க

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட... மேலும் பார்க்க

எந்தெந்த பகுதிகளில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வட தமிழகத்தில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கடலூர்,விழுப்புரம்,புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி(ஊத்தங்கரை, போச்சம்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மண் சரிவு: 6 உடல்கள் மீட்பு.!

ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை காலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையைக் கடந்தும் பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்க... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மண்சரிவு: ஒருவர் சடலம் மீட்பு! 6 பேர் கதி என்ன?

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண் சரிவில், 7 போ் சிக்கியிருந்த நிலையில், தேடுதல் பணியின்போது ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புது... மேலும் பார்க்க