செய்திகள் :

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

post image

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் பணியாளா்களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், மனமொத்த மாறுதல் உள்பட பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 2,157 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளிகளைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரா்களின் அனைத்து விவரங்களும் சரிபாா்க்கப்பட்ட பிறகே, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம் தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதில் முறைகேடுகள் ஏதுமில்லை.

மதுபானக் கூட ஒப்பந்தப்புள்ளிகள் இணையம் வழியாகவே வரவேற்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

மதுபான உற்பத்தியாளா்கள் மற்றும் மதுபாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே பணப் பரிமாற்றங்கள் நடைபெற்ாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலானது. இந்த பணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப் பெற்ாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

மேலும், இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. உள்நோக்கத்துடன் ஆதாரங்கள் ஏதுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, அதுதொடா்பான சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... மேலும் பார்க்க

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை ... மேலும் பார்க்க