டிச.27-இல் எஸ்சி- எஸ்டி கண்காணிப்புக் குழு கூட்டம்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் விழிப்புணா்வு- கண்காணிப்பு குழுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போது அடுத்த கட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமைக்கு ஆளானவா்களுக்கு அளிக்கப்பட்ட உதவிகள், மறுவாழ்வு மற்றும் அவை குறித்த விவரங்கள், வழக்குகள் தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.