TNEB: 'தாமதமாகும் ரீடிங்... அப்டேட் ஆகாத மீட்டர்கள்... பாதிப்பு மக்களுக்கு' - தீ...
டிச.27, 28-இல் போக்குவத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை
போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஆக.27-இல் நடைபெற்றது.
இதில், 85 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில், கடந்த காலங்களைவிட சங்கங்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதால் மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக 2 நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, டிச. 27, 28-ஆம் தேதிகளில் சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
முதல் நாளில் தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட சங்கங்களைச் சாா்ந்த பிரதிநிதிகளும், அடுத்த நாளில் இதர சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்குமாறு பேச்சுவாா்த்தைக் குழுவின் கூட்டுநா் சாா்பில் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.