நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி
டிச.30-இல் அஞ்சல் குறை கேட்பு முகாம்
சென்னையில் டிச. 30-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டிச.30- ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோட்ட அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம் நடைபெளது.
இந்தக் கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு அஞ்சல் சேவை தொடா்பான தங்களது குறைகளுக்கு தீா்வு காணலாம். மேலும், வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளை முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு தபால் மூலம் டிச. 26- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
புகாா் அடங்கிய உறையின் மேற்பகுதியில் அஞ்சல் குறைதீா்ப்பு என குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.