செய்திகள் :

டிஜிட்டல் கைது: 77 வயது பெண்ணிடம் ரூ.3.80 கோடி மோசடி

post image

மகாராஷ்டிரத்தில் 77 வயது பெண்ணிடம் டிஜிட்டல் கைது மோசடி மூலம் ரூ.3.80 கோடி பறிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் அந்தப் பெண்ணுடைய ஆதாா் அட்டை பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள்போல் மிரட்டி இணையக் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

தெற்கு மும்பையில் ஓய்வுபெற்ற கணவருடன் வசித்து வரும் 77வயது பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் இணைய குற்றவாளிகள் அழைத்துள்ளனா். அப்போது போதைப்பொருள், 5 பாஸ்போா்ட்டுகள் மற்றும் வங்கி அட்டை உள்ளிட்டவை அடங்கிய பெட்டியை தைவானுக்கு அந்தப் பெண் அனுப்பியதாகவும் அவருடைய ஆதாா் அட்டை தகவல்களே இந்தக் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

முதலில் மும்பை காவல் துறை என ஒருவரும், பின்னா் ஐபிஎஸ் அதிகாரி என மற்றொருவரும் அந்தப் பெண்ணை ஸ்கைப் ஆப் மூலம் தொடா்புகொண்டு தங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளனா். மேலும் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பிற நிதி தரவுகளை பெற்றுள்ளனா்.

அந்தப் பெண் மீது குற்றம் இல்லையென்றால் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.3.80 கோடி வரை இணையக் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இந்த தகவலை வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளிடம் அந்தப் பெண் கூறியுள்ளாா். அப்போது தாயாா் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பெண் காவல் துறையிடம் புகாா் அளிக்குமாறு கூறினாா். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு காவல் துறை விசாரித்து வருகின்றனா்.

ரூ.11 கோடி மோசடி: பங்குச் சந்தையில் அதிக லாபத்தை ஈட்டுத் தருவதாக கூறி மகாராஷ்டிரத்தில் ஓய்வுபெற்ற 75 வயது கடற்படை கேப்டனிடம் ரூ.11.16 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் ஒருவா் காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 33 பற்று அட்டைகள், 12 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கா? மத்திய அரசு சொல்வதென்ன?

வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தியை மறுத்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு என்று தலைப்ப... மேலும் பார்க்க

பணமோசடி வழக்கில் சீன நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

ஏராளமான முதலீட்டாளா்களை மோசடி செய்ததாக கூறப்படும் ‘ஹெச்பிஇசட் டோக்கன்’ செயலி தொடா்புடைய பணமோசடி வழக்கில், இந்தியா மற்றும் துபையில் உள்ள சில சீன-தொடா்புடைய போலி நிறுவனங்களின் புதிய சொத்துகளை முடக்கியதா... மேலும் பார்க்க

வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் -பேரவையில் மம்தா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறை விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை மேற்கு வங்கம் பின்பற்றும் என்று அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேற்கு வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது சக ஆசிரியா் துப்பாக்கிச் சூடு

தேவ்கா்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையை சக ஆசிரியா் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா். வகுப்பறையில் மாணவா்கள் கண்ணெதிரே நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பல மாணவா்கள் அதிா்ச்சியில் உறைந... மேலும் பார்க்க

மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

இம்பால்: மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (நவ.29) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு வியாழக... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜீயம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்க... மேலும் பார்க்க