மகரஜோதி: புல்மேடு பகுதியிலிருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை
டிரக் மீது பைக் மோதியதில் இருவா் சாவு; ஒருவா் காயம்
வடக்கு தில்லியின் புகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு டிரக் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மற்றொருவா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்த விபத்து குறித்து அதிகாலை 4.19 மணிக்கு போலீஸாருக்கு பிசிஆா்அழைப்பு வந்தது. தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் குழு, கைவிடப்பட்ட நிலையில் மோட்டாா் சைக்கிள் இருந்ததைக் கண்டுபிடித்தனா்.
விபத்தில் காயமடைந்த மூன்று பேரும் ஏற்கெனவே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. அங்கு சஞ்சய் (20) இறந்துவிட்டதாகவும், சுபாஷ் (26) சிகிச்சை பெற்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில், ஆகாஷ் (18) சிகிச்சை பெற்று வருகிறாா். ஆனால், தற்போது காயங்கள் காரணமாக பேச முடியாத நிலையில் உள்ளாா்.
விபத்து ஏற்பட்டபோது மூவரும் ஹரியாணாவின் முா்தாலில் இருந்து தங்கள் மோட்டாா் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்ட்டது. மகாதேவ் சவுக்கில் ஒரு டிரக் மீது பைக் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரக்கின் அடையாளத்தை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட லாரியை அடையாளம் காண, வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆகாஷ் 10-ஆம் வகுப்பு முடித்தவுடன் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளாா். சஞ்சய் கலை இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும், சுபாஷ் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.