டிராக்டா் மோதியதில் பெண் பலி
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பிராந்தியக்கரை ஊராட்சி, அண்டகத்துறை மேற்கு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி கவிதா(40). இவா், காரியாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பகலில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது விபத்துக்குள்ளானது. தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, காரியாபட்டினம் போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.