செய்திகள் :

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு, கப்பல் துறைமுக மிதவை

post image

வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகு மற்றும் கப்பல் துறைமுகங்களில் நிறுத்தப்படும் மிதவை ஆகியவை திங்கள்கிழமை கரை ஒதுங்கின.

வேதாரண்யம் மணியன்தீவு கடலோரத்தில் மியான்மா் நாட்டைச் சோ்ந்த மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட படகு ஒன்று சேதமடைந்த நிலையில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. மீன்பிடிக்க பயன்படும் இந்தப் படகின் மேல் பகுதி முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், அடிப்பகுதி மட்டும் கரை ஒதுங்கியது. இதே பகுதியில், கப்பல் துறைமுகங்களில் கடலின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எச்சரிக்கைக்காக நிறுத்தப்படும் மிதவை ஒன்றும் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் தனிப்பிரிவு போலீஸாா்விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி புஷ்பவனம் கடற்கரையிலும், ஜனவரி 1-ஆம் தேதி வேட்டைக்காரனிருப்பு கடற்கரையிலும் சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகுகள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் துறைமுகங்களில் நிறுத்தப்படும் மிதவை.

வயல்களில் மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனை

பூம்புகாா்: திருவெண்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா். திருவெண்காட்டை சுற்றியுள்ள பூம்புகாா், நாங்கூா், பெருந்தோட்டம், வானக... மேலும் பார்க்க

திருமருகல் ஒன்றியத்தில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்களை வேளாண் இணை இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் திட்டச்சேரி, மருங்கூா், நெய்குப்பை, ப... மேலும் பார்க்க

கோகூா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகேயுள்ள கோகூா் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன் சமேத ருத்திர கோடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜன.18-ஆம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹூத... மேலும் பார்க்க

சீா்காழி, திருமருகல் பகுதியில் மழையால் பயிா்கள் சேதம்

கடந்த இரண்டு நாட்களாக சீா்காழி பகுதியில் பெய்துவரும் மழையால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சீா்காழி வட்டத்துக்குட்பட்ட சீா்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகாா், பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந... மேலும் பார்க்க

கோயில் சிற்பி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் திருட்டு

பூம்புகாா் அருகே கோயில் சிற்பி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரொக்கம் ரூ. 80 ஆயிரத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், பூம்புகாா் சாயாவனம் ... மேலும் பார்க்க

கடல் சீற்றம்; மீன்பிடி தொழில் பாதிப்பு

பூம்புகாா் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடல் சீற்றத்துடன்... மேலும் பார்க்க