செய்திகள் :

டி20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து: தொடரும் புரூக்கின் வெற்றிப் பயணம்!

post image

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரையும் இங்கிலாந்து அணி முழுமையாக வென்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடியது. மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த நிலையில், டி20 தொடரையும் 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால், கடைசிப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றிபெறுமா என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இங்கிலாந்து பேட்டிங்

அதன்படி, இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் இருவரும் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் 9 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமி ஸ்மித் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து பட்லர் 22 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் ஹாரி புரூக் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 35 ரன்களும், இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 1 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களும் விளாசி அணிக்கு வலுவான ஸ்கோரை எடுக்க உதவினர். மேலும், எக்ஸ்ட்ரா வகையில் 11 ரன்களும் கிடைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் மோட்டி, அக்கேல், ரூதர்போர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மேற்கிந்திய தீவுகள் தோல்வி

பின்னர், 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் இவின் லீவிஸ், சார்லஸ் ஆகியோர் தலா 9 ரன்கள், கேப்டன் ஷாய் ஹோப் 45 ரன்கள் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஷிம்ரன் ஹெட்மையர் 26 ரன்கள் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தனர்.

தனியாளாகப் போராடிய ரோமன் பவல் 45 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்தார். அவரால் ரன் விகிதத்தை மட்டுமே குறைக்க முடிந்தது. அணியை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. இறுதிக்கட்டத்தில் ஹோல்டர் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

20 ஓவர்கள் முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரையும் முழுமையாக வென்றது. இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஹாரி புரூக்கின் வெற்றிப் பயணம்

இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹாரி புரூக் தலைமையில் அந்த அணி டி20 மற்றும் ஒருநாள் என மொத்தமாக 6 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு(ஜூன் 23) ... மேலும் பார்க்க

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

2-வது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

சதம் விளாசிய கே.எல்.ராகுல்; வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த... மேலும் பார்க்க

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட... மேலும் பார்க்க