இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
டெமு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதற்கு வரவேற்பு
திருத்துறைப்பூண்டி வழியாக இயக்கப்படும் திருவாரூா்-பட்டுக்கோட்டை டெமு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா்-பட்டுக்கோட்டை டெமு ரயில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்பட்டு வருகிறது. காலை 8.30 மணிக்கு திருவாரூல் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு வந்தடைகிறது. பட்டுக்கோட்டையில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 6.55 மணிக்கு சென்றடைகிறது.
மாலை 5.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு செல்வதால், பட்டுக்கோட்டை பகுதியில் பணிபுரியும் அரசு அலுவலா்கள், கல்வி பயிலும் மாணவா்கள் உள்ளிட்டோா் சிரமப்பட்டு வந்தனா். இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினா் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை விடுத்தனா்.
இக்கோரிக்கை ஏற்கப்பட்டு இந்த ரயில் பட்டுக்கோட்டையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு திருவாருா் செல்லும் என புதிய ரயில்வே கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அன்பழகன், முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளா் ரதிப்பிரியா, முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் ஜெயந்தி ஆகியோருக்கு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், பயணிகள் வரவேற்றுள்ளனா். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் நாகராஜன், மாவட்டச் செயலாளா் மணிமாறன் ஆகியோா் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிஉள்ளனா்.