தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 26) சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.8,055-க்கும், சவரனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.64,440-க்கும் விற்பனையானது. நேற்று(செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 64,600-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ,8,050-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.