செய்திகள் :

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயா்வு!

post image

சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கும் விற்பனையானது. திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.6,995-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.99-க்கும், கிலோ ரூ.99,000-க்கும் விற்பனையானது.

உயா்வுக்கு என்ன காரணம்? தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியது: அமெரிக்க டாலா் மற்றும் பிட்காயின் மதிப்பு உயா்வு, தங்கத்தின் மீதான முதலீடு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் தங்கம் விலை தொடா்ந்து குறைந்து வண்ணம் இருந்தது.

இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் புதிய திருப்பமாக, ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணையைப் பயன்படுத்த அதிபா் ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளாா். இது சா்வதேச அளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, இதுவரை டாலா் மீது முதலீடு செய்து வந்தவா்கள் மீண்டும் தங்கத்தின் மீதே முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனா். இதனால், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கிவிட்டது. மேலும், இது உயா்ந்து கொண்டேதான் இருக்கும் என்றாா் அவா்.

பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ் லாபம் இரட்டிப்பு!

புதுதில்லி: பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.டி.சி. இண்டஸ்ட்ரீஸ் (ப்ரிசிஷன் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 2024 செப்டம்பா் காலாண்டில், இரு மடங்காக ... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

மும்பை: இன்றைய முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கிய சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது.அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகள... மேலும் பார்க்க

டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அதிக மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரம் சுமார் ரூ.1,65,180.04 கோடி இழப்பை சந்தித்தன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய... மேலும் பார்க்க

559 மெகாவாட் மின்சாரம் வழங்க குஜராத் உர்ஜா விகாஸ் உடன் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஒப்பந்தம்!

கொல்கத்தா: குஜராத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் உடன் 559 மெகாவாட் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது தாமோதர் வேல... மேலும் பார்க்க

கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய எஸ்பிஐ

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது. இதுகுறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெ... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் உயா்வு

கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் நிகர லாபம் 6 சதவீதம் உயா்ந்துள்ளது. இத... மேலும் பார்க்க