செய்திகள் :

தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் - ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?

post image

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ரமணி பள்ளியில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மதன்குமார் (30). இவர் ரமணியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மதன்குமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அப்போது மதன்குமார், ரமணியை காதலிக்கும் விஷயத்தை தன் பெற்றோரிடம் சொல்லியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மதன், ரமணி மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் ரமணி.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் எடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வகுப்புக்குள் சென்ற மதன்குமார் `என்னை திருமணம் செய்து கொள்ள முடியாதுனு சொல்லிட்டீயா?’னு கேட்டுள்ளார். `உன்னை யார் க்ளாஸ்க்கு வர சொன்னது?’னு ரமணி கேட்டதாக தெரிகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமார், ரமணி கழுத்தும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அப்படியே சரிந்து விழுந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதைபார்த்து மாணவர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஸ்

இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஸ், ``தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பதிவிட்டுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

`பணக்காரர்கள் மட்டும்தான் டார்கெட்; ஏழைகளை துன்புறுத்தமாட்டேன்!' - திருடி சிக்கிய இளைஞர் பேச்சு

மும்பை போரிவலி பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுக்ராம் என்பவர் தனது குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு கதவை திறந்து உள்ளே இருந்த லாக்கரை உடைத... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி, 3 வயது மகள் கடத்தல்; 8 பேர் கைது - பின்னணி என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப் (36). இவர் அதே பகுதியில் 'ஏ.பி.ஆர்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.திருவண்ணாமலை, வேலூர்... மேலும் பார்க்க

குஜராத்: போலி மருத்துவர்கள் தொடங்கிய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சிக்கியது எப்படி?

போலி மருத்துவர்கள் இணைந்து பெரிய மருத்துவமனையைத் தொடங்கி ஒரே நாளில் மாட்டிக்கொண்ட சம்பவம், குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றுள்ளது. சூரத்தின் உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட விருந்தி... மேலும் பார்க்க

Whatsapp : வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பகிர்ந்த மெட்டா; ரூ.213 கோடி அபராதம் விதித்த CCI ஆணையம்!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களை இயக்கி வருகிறது. இதில் பாமர மக்கள் வரை சென்ற தளம்தான் வாட்ஸ்அப். இலவச வீடியோ, ஆடியோ கால், இளைஞர்களை கவரும் வகை... மேலும் பார்க்க

`ஒரு கொலை இல்லை... இரண்டு கொலை’ - கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இள... மேலும் பார்க்க

சென்னை: பெண் இன்ஜினீயர் கொடுத்த பாலியல் புகார் - பாடகர் குருகுகன் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், கடந்த 25.10.2024-ம் தேதி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் . அதில் கூறியிருப்பதாவது, ``சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க