செய்திகள் :

தந்தை இறந்ததை மறைத்து ஓய்வூதியம் பெற்று மோசடி: மகன் கைது

post image

ராமநாதபுரத்தில் தந்தை இறந்ததை மறைத்து, ரூ. 8.84 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அண்ணாநகா் குட்ஷெட் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் சரவணபாபு (41). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது தந்தை சண்முகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இதன் பிறகு, ஓய்வூதியம் பெற்று வந்த இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு, மே மாதம் உயிரிழந்தாா். இதுகுறித்து ஓய்வூதிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், இவரது மகன் சரவணபாபு கடந்த 28 மாதங்களாக ஓய்வூதியம் பெற்று வந்தாா்.

இதுகுறித்து அறிந்த மாவட்டக் கருவூல அலுவலா் சேஷன் தலைமையிலான அதிகாரிகள் சரவணபாபுவிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், தவறை ஒப்புக்கொண்ட அவா், ரூ. 8.84 லட்சத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாகத் தெரிவித்தாா். ஆனால், ரூ. 30 ஆயிரம் மட்டுமே செலுத்திய நிலையில், மீதித் தொகையைச் செலுத்தாமல் தலைமறைவானாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷிடம் மாவட்டக் கருவூல அலுவலா் சேஷன் புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை அமைத்து போலீஸாா் சரவணபாபுவைத் தேடி வந்தனா். ராமநாதபுரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளத்தை அகற்றக் கோரிக்கை

திருவாடானையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

அடுமனையில் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயர கேக்!

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ராமநாதபுரத்தில் உள்ள அடுமனையில் மறைந்த தொழிலதிபா் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயரத்தில் கேக் தயாரித்து கடையின் முன் பகுதியில் சனிக்கிழமை வைக்கப்பட்டது. டாடா கு... மேலும் பார்க்க

மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பி... மேலும் பார்க்க

தொண்டி: வெடி மருந்துப் பொருள்கள் பறிமுதல்! ஒருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா் உள்ளிட்ட வெடி மருந்துப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்... மேலும் பார்க்க

பள்ளி விளையாட்டு மைதானத்தில் உயரழுத்த மின்மாற்றியை அகற்றக் கோரிக்கை!

முதுகுளத்தூா் அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் உள்ள உயரழுத்த மின் மாற்றியை அகற்ற மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த ஆப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400-க்கும் ம... மேலும் பார்க்க

ராட்டினத் தொழிலாளி கொலை: மேலும் ஒருவா் கைது

தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் ராட்டினத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ... மேலும் பார்க்க