செய்திகள் :

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

post image

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளி வருகின்றன.

அப்படி தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, வாடகை தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக கூறப்படுகிறது.

எலான் மஸ்க், செயின்ட் கிளேர், பாடகர் கிரிம்ஸ், நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மற்றும் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் ஆகிய நான்கு பெண்கள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று மஸ்க்கின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

மஸ்க் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஜப்பானிய பெண்ணுக்கு விந்துக்களை வழங்கியதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

சமீபத்தில் மஸ்கின் 13 வது குழந்தையை பெற்றெடுத்த 26 வயதான செயின்ட் கிளேர், பொதுவெளியில் ஒரு தகவலை கூறினார். அதில், அவர் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என்பதையும் மஸ்க்குடனான அவரது உறவு பற்றியும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

மஸ்கின் நீண்ட கால உதவியாளர் ஜாரெட் மூலம் எலான் மஸ்க்கின் நிதி உதவி பெற வேண்டும் என்றால், ரகசிய ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

இவ்வாறு ரகசியமாக வைக்க எலான் மஸ்க் ஒரு குறிப்பிட்ட தொகையை செயின்ட் கிளாருக்கு வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த சலுகையை அவர் நிராகரித்திருக்கிறார்.

Baby (Representational Image)

இருப்பினும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மஸ்கின் பெயரை சேர்க்காமல் இருக்க ஒப்புக் கொண்டுள்ளார். தந்தை என்பதை வெளிப்படுத்தாமல் இருக்க ஒப்புக்கொண்டால் முதலில் $15 பில்லியன் மற்றும் மாதந்தோறும் $100,000 நிதியுதவியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக செயின்ட் கிளேர் கூறினார்.

இந்த சலுகை மஸ்க்கின் நெருங்கிய உதவியாளர் ஜாரெட் பிர்ச்சால் மூலம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது வந்ததகாவும் கூறினார்.

இந்த உறவு பற்றி வெளியில் பகிரப்பட்ட பிறகு அவரின் நிதி உதவி குறைக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

பிறப்பு விகிதம் குறைவது மனிதகுலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் என்ற கருத்தில் மஸ்க் நம்பிக்கை வைத்திருப்பதால், பல குழந்தைகளை பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, எலோன் மஸ்க் $367.9 பில்லியன் நிகர மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உள்ளார். மேலும் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராகவும், அவரது அமைச்சரவையில் ஆலோசகராகவும் உள்ளார்.

Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த வார கேள்விகள்!

விவாதப்பொருளான உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, அடுத்த இந்திய தலைமை நீதிபதி, தொடங்கிய மீன்பிடித் தடைக்கலாம், ஐ.பி.எல், சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட டிரெய்லர் ரிலீஸ் எனப் பல நிக... மேலும் பார்க்க

"இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள்" -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

மும்பையில் அடிக்கடி மராத்தியர் மற்றும் குஜராத்தியர் இடையே சிறு சிறு தகராறு ஏற்படுவதுண்டு. குஜராத்தியர்கள் வசிக்கும் கட்டிடங்களில் மராத்தியர்களுக்கு வீடு விற்பனை செய்வது கிடையாது.அப்படியே இரு தரப்பினரு... மேலும் பார்க்க

மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்... மேலும் பார்க்க

”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்ப... மேலும் பார்க்க

`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது ச... மேலும் பார்க்க