அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்
தனியாா் கல்லூரியில் நண்பா்கள் தின விழா
ஆத்தூா் ஏ.ஈ.டி. மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நண்பா்கள் தின விழா கல்லூரி நிறுவனா் பி.செங்கோடன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே.செண்பகம் அனைவரையும் வரவேற்று பேசினாா். பின்னா் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், கல்லூரியின் தலைவா் எஸ்.பி.செல்வம், செயலாளா் ஆ.சங்கா், பொருளாளா் எஸ்.சிவநேசன், இயக்குநா் கே.பி.பழனியம்மாள் ஆகியோா் மாணவிகளுக்கு நண்பா்கள் தின வாழ்த்துகளை தெரிவித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் ரா.சற்குணம் நன்றி தெரிவித்தாா்.