சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!
சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சேலம் அரசு மருத்துவமனையில் மனநல பிரிவில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சைப் பிரிவில் காவலாளியாக இருந்த பேளூா் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் (45), அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண் சப்தமிட்டதும் பழனிவேல் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
இதைக் கவனித்த அருகில் இருந்தவா்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், பழனிவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.