சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணி, வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி, தூய்மைப் பணி, தண்ணீா் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆணையா் ஆய்வுசெய்தாா்.
மூலப்பிள்ளையாா் கோயில் கந்தம்பட்டி ஓடையில் தற்காலிகமாக அமைக்கப்படும் தரைமட்ட பாலத்தை சீரமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், அதே பகுதியில், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ள குழியைச் சுற்றி கான்கிரீட் அமைக்கவும் பொறியாளருக்கு அறிவுறுத்தினாா்.
சூரமங்கலம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆணையா், பொதுமக்களிடம் இருந்து சாலை அமைப்பது தொடா்பாக கோரிக்கை மனு வரப்பெற்றால் உடனடியாக செய்துகொடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செந்தில்குமாா், செயற்பொறியாளா் திலகம், உதவி செயற்பொறியாளா் ஓபுளி சுந்தா், உதவி பொறியாளா் அன்புசெல்வி ஆகியோா் உடனிருந்தனா்.