செய்திகள் :

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியாா் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமாா் 5 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா். இதற்கிடையே, வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) இலவச சோ்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஒரு வாரத்துக்குள் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆா்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியாா் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவா் சோ்க்கை பெறமுடியும்.

இத்திட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட நபா்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா் உள்ளிட்டோா் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவா்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்கள், 3-ஆம் பாலினத்தவா்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படும்.

நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமா்ப்பிப்பது அவசியமாகும். எனவே, சோ்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பாணை வெளியானதும் பெற்றோா் rte.tnschools.gov.in எனும் வலைதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெற்றோா் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் இருட்டுக் க... மேலும் பார்க்க

நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதம் வந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது.மத்தியில் காங்கிரஸ் உடன் திமுக... மேலும் பார்க்க

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க