ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!
திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணை புகாரில், மருமகன் பல்ராம் சிங் இன்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், மருமகனின் வழக்குரைஞர் காவல்நிலையத்தில் ஆஜராகி, விசாரணைக்கு நேரில் ஆஜராக மலும் 10 நாள்கள் அவகாசம் கேட்டு நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்காவுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகார் தொடர்பாக விசாரணைக்கு திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு பல்ராம் சிங்குக்கு நெல்லை மகளிர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால், இன்று அவர் ஆஜராகவில்லை என்றும், ஆஜராக மேலும் 10 நாள்கள் அவகாசம் கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.