செய்திகள் :

ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

post image

நீலகிரியில் துணை வேந்தர்கள் மாநாடு குறித்த ஆளுநரின் அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அரசமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், அவற்றுக்கு விரோதமாக தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக் கழங்களில் தன்னை வேந்தராக கருதிக் கொண்டு துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுவை அமைத்து, துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழக நிர்வாகத்தையும், அதற்கான முழு நிதிச் சுமையையும் ஏற்று செயல்படுகிற தமிழ்நாடு அரசின் துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை ஆளுநர் பறித்துக் கொண்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு அற்புதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இத்தீர்ப்பின் மூலம் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என்று கூறியதோடு, முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் பிரிவு 142 இல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடியாக ஒப்புதல் அளித்தனர். இதன்மூலம் கூட்டாட்சியின் செயல்பாடுகளுக்கு வலிமை சேர்த்தனர்.

இத்தீர்ப்பின்படி அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் அவருக்கு கிடையாது என மிகத் தெளிவாக தீர்ப்பை கூறிய பிறகும், தமிழக ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக தெரியவில்லை. இந்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் தில்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாள்கள் நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பி.ஆர். அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கூட்டுச் சதியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கிற செயலாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்கிற வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து அது சட்டமாக நிறைவேறி தமிழக முதலமைச்சர் வேந்தராக பொறுப்பேற்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார்கள்.

இந்த மாநாட்டிற்கு போட்டியாக தமிழக ஆளுநர் அதே துணை வேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து மாநாடு கூட்டுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்? அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழ்நாடு முதல்வரே வேந்தரான பிறகு, இந்த மாநாட்டை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ?

தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை பரப்ப வேண்டுமென்ற நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக் கழக துணை வேந்தர்களின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஆளுநரின் இத்தகைய சட்டவிரோத செயலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் துணை போயிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்தும், இம்மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையிலும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர். கணேஷ் தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சீரழிக்கும் செயல்களை கண்டிக்கிற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் காங்கிரஸ் பேரியக்கக் கொடிகளை கரங்களில் ஏந்தி பங்கேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படிக்க | மகாராஷ்டிரத்திலும் ஹிந்திக்கு எதிர்ப்பு! என்ன நடக்கிறது?

'நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை' - பேரவையில் புலம்பிய அமைச்சர் பிடிஆர்!

தன்னுடைய துறையில் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என பேரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்... மேலும் பார்க்க

மே 12-ல் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவி... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை: ஜவாஹிருல்லா

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ப... மேலும் பார்க்க

துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் ச... மேலும் பார்க்க

மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்: துரை வைகோ

சென்னை: இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார். மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் வழிபாடு: ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்!

சென்னை: திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், ஆதிக்க சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.விழுப்புரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க