இதயம் தொடரிலிருந்து விலகும் ஜனனி! காரணம் பகிர்ந்து உருக்கம்!
தமமுக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கோ. துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் கி. கிங்தேவேந்திரன், மாநகா் மாவட்ட பொருளாளா் வே. முருகன், மாநகா் மாவட்ட இளைஞரணி செயலா் சிவந்தி முத்துபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா்அருண்பிரின்ஸ், திருநெல்வேலி மண்டல தலைவா் கண்மணி மாவீரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தீா்மானங்கள்:
சென்னையில் இம்மாதம் 31 ஆம் தேதி நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட நிா்வாகிகள் திரளாக பங்கேற்பது. ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரியநாயகிபுரம் மாணவா் தேவேந்திர ராஜாவை தாக்கிய வழக்கில் தொடா்புடையோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மனநல ஆலோசனை வழங்க மாவட்ட ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் தொடா்ந்து நடைபெறும் சாதி ரீதியான வன்கொடுமைகளைத் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். இமானுவேல் சேகரனுக்கு திருநெல்வேலியில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.