செய்திகள் :

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

post image

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் கிரிவலம் போக வில்லை, சரி வலம் தான் போனதாக பதிவிட்டு உள்ளார். இடம் போய் கொண்டு இருந்தவர்கள் வலம் போக ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றி தான்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறி உள்ளார். தேர்தல் ஜனநாயகத்தில் யாரும் நிராகரிப்பட்டவர்கள் கிடையாது. 3 லட்சம் பேர் ஒட்டு போட்டு அங்கீகரித்து உள்ளார்கள். ஆன்மிகமும் அரசியலும் தமிழகத்தில் கலக்கவே கலக்காது என்கிறார் உதயநிதி. சவால் விடுகிறேன் தமிழகத்தில் ஆன்மிகமும் அரசியலும் கலக்கத் தான் செய்யும்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

அண்ணா வளர்த்த்து தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக இருக்காது. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்கிறார். உதயநிதியை தயார் செய்வதால் சமூக நிதி அங்கு இல்லை. பிறகு திருமாவளவனுக்கு அங்கீகாரம் எங்கே கிடைக்கும்.

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

கம்யூனிஸ்டு கட்சியினர், சாம்சங் தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்தியது. ஆட்சியை எதிர்த்து பாட ஆரம்பித்து விட்டார்கள். கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி திமுக கட்சியிலேயே பிரச்னைகள் இருக்கின்றன. 2026ம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலமான பணியாளா்கள் வாரிசுக்கு அகவிலைப்படி எப்போது? தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பைச் சோ்ந்த காலமான ஊழியா்களின் வாரிசுகளுக்கு அகவிலைப்படி உத்தரவு தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெள... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொர... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவினா் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்க... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்

வங்கக் கடலில் புதன்கிழமை (அக்.23) புயல் உருவாகவுள்ளதாகவும், அதற்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுவையில் 6 நாள்கள் மழை பெய்ய ... மேலும் பார்க்க

மயக்கவியல் நிபுணா்களுக்கு அதிக பணி அழுத்தம்: மருத்துவப் பல்கலை. துணை வேந்தா் கே.நாராயணசாமி

மருத்துவத் துறையில் அதி முக்கிய பங்களிப்பை அளித்து வரும் மயக்கவியல் மருத்துவா்களுக்கு பணி அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், அவா்களது நலனைக் காப்பது அவசியம் என்றும் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க