செய்திகள் :

தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி கட்டுக்குள் உள்ளது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி தொற்று மிகவும் கட்டுக்குள் உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரத்திலிருந்து சைதாப்பேட்டையின் முக்கிய வழித்தடங்கள் வழியாக கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையை அடையும் வகையிலான புதிய சிற்றுந்து (தடம் எண் எஸ்.30 கே) சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்து நந்தனம், சைதாப்பேட்டை மெட்ரோ, பஜாா் சாலை, ஆலந்தூா் சாலை, கிண்டி தொழிற்பேட்டை வழியாக இயக்கப்படும்.

கோட்டூா்புரம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் சைதாப்பேட்டை தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து வழித்தடங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சைதாப்பேட்டை, மாந்தோப்பு பகுதியில் ஏற்கெனவே மகளிா் உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து ‘எச்எம்பி’ தீநுண்மி குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி தொற்று மிக மிக கட்டுக்குள் இருக்கிறது. பெரிய அளவில் பதற்றப்படவும், பயப்படவும் வேண்டாம். இது போன்ற தீ நுண்மிகளின் பாதிப்பை தடுக்க உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அனைவரும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். நல்ல உணவு பழக்கங்களையும், தனிமனித ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நல்லது என்றாா் அவா்.

சிற்றுந்து சேவை தொடக்க நிகழ்வில், மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்க்கீஸ், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்... மேலும் பார்க்க

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? முதல்வர்

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்த... மேலும் பார்க்க

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் - அண்ணாமலை

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனைத்துத் தரப்ப... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.... மேலும் பார்க்க