தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: ஜி.கே.வாசன்
தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி - பாக்கியம்மாள் கொலை செய்யப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அரசின் கட்டுக்குள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தொடா்ந்து பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. தமிழக முதல்வா் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவா்களுக்கு அதிகபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.