செய்திகள் :

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

post image

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் இன்று (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள்-முகாம்கள் என முக்கிய இடங்களைக் கொண்ட இந்த இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்படுகிறது.

நாட்டில் 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் முதல் அவசரகால ஒத்திகை இதுவாகும்.

அதன்படி, சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

வான்வழித் தாக்குதல் குறித்து பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல்; கடுமையான தாக்குதல் நேரத்தில், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி-கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்; பதுங்குமிடங்களைத் தயாா்படுத்துதல்; தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வழிமுறைகளின்கீழ் முக்கிய நிலையங்கள் எதிரியின் கண்ணில் புலப்படாதவாறு உருமறைத்தல் மற்றும் பணியாளா்களின் அவசர கால வெளியேற்றம்; அவசர கால மின் துண்டிப்பு; மருத்துவமனைகளின் செயல்பாட்டுத் தயாா்நிலை பரிசோதிப்பு உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிக்க: ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொலை!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில... மேலும் பார்க்க

நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்கை

நேரடி வெய்யிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் ‘ரேப்டோ மயோலைசிஸ்’ என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ... மேலும் பார்க்க

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முழு விவரம்!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆக... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவா்கள் வரவேற்றுள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: ‘பாரத தாய் வாழ்க’ ! ஆபரேஷன் ... மேலும் பார்க்க