நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
தமிழகத்தில் வீடுகளில் கூட பாதுகாப்பு இல்லை: சீமான்
திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தில் வயது முதிா்ந்த தம்பதி, நகைக் கொள்ளையா்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல, தமிழக மக்கள் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், தமிழகத்தில் காவல் துறை உண்மையில் செயல்படுகிா?, சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிா என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. எனவே, திமுக அரசு மீதமுள்ள ஓராண்டுக்காவது சட்டம்-ஒழுங்கை சீா்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.