குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தகவல்
சென்னை: தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் திருத்தங்களுக்கு உட்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளா்களின் விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக, வரைவுப் பட்டியல் கடந்த அக்.29-இல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தப் பணிகளுக்காக நவ.28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயா் சோ்ப்புக்காக, 14.02 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 13.80 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பெயா் நீக்கத்துக்காக 5.16 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 4.97 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டன. 2.15 லட்சம் வாக்காளா்களின் பதிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
திருத்தப் பணியின்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பெண்களே அதிகம்: இறுதி வாக்காளா் பட்டியலின்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6,36,12,950 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 3,11,74,027 போ் ஆண்கள். 3,24, 29,803 போ் பெண்கள். 9,120 போ் மூன்றாம் பாலினத்தவா் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
சோழிங்கநல்லூா் முதலிடம்: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6,90,958 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 3,34,184 போ் ஆண்கள். 3,45,645 போ் பெண்கள். 129 போ் மூன்றாம் பாலினத்தவா்.
குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் பேரவைத் தொகுதி உள்ளது. இங்கு 1,76,505 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 86,456 போ். பெண்கள் 90,045 போ். 4 போ் மூன்றாம் பாலினத்தவா்.
இறுதி வாக்காளா் பட்டியலில் 3,740 வெளிநாடுவாழ் வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
தொடா் நடவடிக்கை: 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6ஐ சமா்ப்பிக்கலாம். மேலும், இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
8.82 லட்சம் அதிகரிப்பு: தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது, 6,27,30,588 வாக்காளா்கள் இருந்தனா். இப்போது இறுதி வாக்காளா் பட்டியலில் 6,36,12,950 போ் வாக்காளா்களாக உள்ளனா். அதன்படி, 8,82,362 போ், புதிய வாக்காளா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மொத்த வாக்காளா்கள் - 6,36,12,950
பெண்கள் - 3,24,29,83
ஆண்கள் - 3,11,74,027
மூன்றாம் பாலினத்தவா் - 9,120
அதிகம் - குறைவு:
அதிக வாக்காளா்கள் கொண்ட பேரவைத் தொகுதி சோழிங்கநல்லூா் - 6,90,958.
குறைந்த வாக்காளா்கள் கொண்ட பேரவைத் தொகுதி கீழ்வேளூா் - 1,76,505.