பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்
தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!
தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னத்தால் சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது:
இதையும் படிக்க: கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்த இந்த புயல் சின்னம், தற்போது மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 25 இரவு முதல் டிச. 26 ஆம் தேதி வரை மழை பெய்யும். அதிக பாதிப்பு இல்லாத மழையாக இருக்கும்.
உள் தமிழகத்தில் இன்று(டிச. 23) மழைக்கு வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.