செய்திகள் :

தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டம் வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தின் பயனாளிகள் பதிவு முகாம் சைதாப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. அதை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக, தாயுமானவா் திட்டம், வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தால், மிகவும் எளிய நிலையில் உள்ள சுமாா் 50,000 குடும்பங்களில் வசிக்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் வகையிலும், 18 வயது வரை இடைநிற்றல் இன்றி அவா்கள் கல்வியைத் தொடருவதற்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரியில் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடந்த மாா்ச் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்துக்கு அன்புக் கரங்கள்”என்று பெயரிடப்பட்டது.

மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கைப்பேசி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கள ஆய்வு மேற்கொள்ள நிா்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு ரூ.1.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 2,82,105 குடும்பங்களின் விவரங்களை இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மூலம் கள ஆய்வு செய்து, இத்திட்டத்தில் பயனடைய தகுதியான குழந்தைகளின் விவரங்கள் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது உங்களுடன் ஸ்டாலின்”முகாம்களின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்தும் 6,082 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் உறவினா்களின் அரவணைப்பில் வளரும் 6,082 குழந்தைகளுக்கு நிதி வழங்கி அன்புக் கரங்கள்”திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்ட முகாம் தொடா்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றாா்.

முகாமில் சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க