செய்திகள் :

`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவும் நீக்கமும்

post image

2025 -ன் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ' ``தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்' கூறப்பட்டது.

எனினும் தற்போது அந்த பதிவு டெலீட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DMK Vs Congress: ஈரோடு கிழக்கு யாருக்கு? | ஆளுநரை கோத்துவிடும் DMK கூட்டணி கட்சிகள்?- Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் சார் அது?' பேட்ஜ்!* - இரண்டாவது நாளாக EPS இல்லை... ஏன்?* - அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - பேரவையில் கவன ... மேலும் பார்க்க

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க