செய்திகள் :

‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25'-யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25' யை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது முந்தைய நாள், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்.

அதேபோல, தமிழ்நாடு அரசும் நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதையடுத்து இன்று(மார்ச் 13) தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25'- யை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோச... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி!

வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் காட்சி நடத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர்... மேலும் பார்க்க

தமிழக பேரவை தொடங்கியது! பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.2025 - 26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.எகிறும் எதிர்பார்ப்... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் 2025 - 26: செய்திகள் - உடனுக்குடன் - நேரலை!

வரும் நிதியாண்டுக்கான (2025 - 26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் சற்று நேரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக... மேலும் பார்க்க

தேசிய சின்னத்தை அவமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய சின்னத்தை அவமதிப்பதோ, குறைத்து மதிப்பிடுவதோ எங்களின் நோக்கம் அல்ல என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகா... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழா: தமிழர்களின் பாதுகாப்புக்குச் செல்லும் கடற்படைக் கப்பல்கள், விமானம்!

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து செல்வோரின் பாதுகாப்புக்காக இந்திய கடலோரக் காவல் படையின் கப்ப... மேலும் பார்க்க