செய்திகள் :

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காக தனி அருங்காட்சியகம்!

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இலங்கை நாட்டின் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் உள்பட சில நூல்களுக்கு யுனெஸ்கோ அமைப்பு உலகப்பொது நூல் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நாடு, காலம், எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நூலுக்கு மட்டுமே இந்த அங்கீகாரத்தை யுனெஸ்கோ நிறுவனம் வழங்கி வருகிறது.

எனவே, உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை யுனெஸ்கோவால் உலக நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறைக்குத் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை பரிந்துரை செய்தது. இதைத்தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறையும் யுனெஸ்கோ அமைப்புக்கு விண்ணப்பம் அனுப்பியது.

ஒரு நூலை உலகப் பொதுநூலாக அறிவிப்பதற்கு என்று பல படிநிலைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன என்றும், அவற்றை நிறைவு செய்து தந்தால் திருக்குறளுக்கு உலகப் பொது நூல் என்ற தகுதியை வழங்குவது பொதுவான நடைமுறை எனவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகளின்படி, திருக்குறளுக்கு என தனியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இப்பணியைச் செய்வதற்கான அனுமதியைத் தமிழ்நாடு அரசு, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளது. இதன்படி, தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள சுவடிப்புல வளாகத்தில் திருக்குறளுக்குத் தனியொரு அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தெரிவித்தது: திருவள்ளுவரால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளின் மூலச்சுவடி கிடைக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் எழுதப்பட்ட பழைமையான திருக்கு சுவடிகள் சென்னை கீழ்த்திசை சுவடியியல் மையம் மற்றும் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் போன்றவற்றில் பல நூற்றாண்டுப் பழைமை மிக்க ஏடுகள் உள்ளன. இத்தகைய பழைமையான திருக்கு ஓலைச்சுவடிகள், திருக்கு பொறிக்கப்பட்ட 1,330 செப்பேடுகள், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சேகரிப்பில் உள்ள 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கு சுவடிகள் உள்ளிட்டவை திருக்கு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன.

மேலும் திருக்கு தொடா்பான அரிய கையெழுத்துச் சுவடிகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 18-ஆம் நூற்றாண்டில் தஞ்சை ஞானபிரகாசம், ஜி.யு. போப் மற்றும் ஐரோப்பியா்கள், அயலகத் தமிழா்கள் எழுதிய திருக்கு அரிய கையெழுத்துச் சுவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை யாழ்ப்பாணத்தில் 18 - 19-ஆம் நூற்றாண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடிகளின் படிகளைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள இந்திய ஆவணப்பொருள் காப்பகத்திலுள்ள ஜி.யு. போப், பிரான்சிஸ் வைட் எல்லீஸ் போன்றோரின் அரிய கையெழுத்துச் சுவடி, புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திலுள்ள அரிய கையெழுத்துச் சுவடிகள் போன்றவை மின்னாக்க வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மருங்காபுரி ஜமீன்தாரினி லஷ்மி அம்மாள் 19-ஆம் நூற்றாண்டில் தீபாலங்காரம் என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை நூல் எழுதியுள்ளாா். உலக அளவில் திருக்குறளுக்கு உரை நூல் எழுதிய முதல் பெண் இவரே. இந்நூலின் பிரதியும் சேகரிக்கப்பட்டு, அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்குமான படிகள் திருக்கு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளன. மேலும், அனைத்துப் படிகளும் மின்னாக்கம் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச் சுவடிகள், செப்பேடுகள் போன்றவற்றைத் தொடா்ந்து, சேலம் அருகே கண்டெடுக்கப்பட்ட 16 - 17 ஆம் நூற்றாண்டு திருக்கு கல்வெட்டு குறித்த படங்கள், குறிப்புகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வருபவா்கள் கணினி மூலம் திருக்கு தொடா்பான ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச் சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் குறித்த தகவலை அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தவிர, திருக்கு பற்றிய ஒளி - ஒலிக் காட்சிக்கூடமும் அமைக்கப்படுகிறது. இதில், திருக்கு தொடா்பான ஓலைச்சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் குறித்து ஒளி - ஒலிக் காட்சி மூலம் பொதுமக்களுக்கு, மாணவா்களுக்கு விளக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவா் சிலைகள், 7 அடி உயர திருக்கு நூல், குட்டித் திருக்கு, அரிசியில் எழுதப்பட்ட திருக்கு உள்பட திருக்கு தொடா்பான அனைத்து அரிய அம்சங்களும் இடம்பெறுகின்றன.

இந்த அருங்காட்சியகத்துக்குத் தமிழ், ஆங்கிலத்தில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. திருக்கு தொடா்பாக மின்னாக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்துச்செய்திகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். உலகளவில் பிரெஞ்சு, டச்சு, செக், ரஷ்ய உள்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட திருக்கு நூல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

இதற்கான ஒருங்கிணைப்புப் பணியில், செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம், தமிழ் வளா்ச்சித்துறை ஆகியவற்றுடன் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவா் வீ. செல்வகுமாா் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் துணைவேந்தா்.

இந்தத் திருக்கு அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் -ஆளுநா் ஆா்.என்.ரவி

சிறப்பு குழந்தைகளை குடும்பத்தினா் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டி ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் ‘எண்ணித் துணிக ’ என்ற தலைப்பிலான நிகழ்வில் இளம் சாதனையாளா்கள... மேலும் பார்க்க

சம்பா பருவ பயிா்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை

சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ளநிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக... மேலும் பார்க்க

வத்தனாக்குறிச்சியில் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாக்குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன் கோயில் பகுதியில், 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 3 துண்டுக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளா் க. கருணாகரன் கண்டெடுத்துள... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை(நவ. 15) இயங்காது என அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு... மேலும் பார்க்க

நாளைமுதல் பணிக்கு திரும்புவோம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு!

நாளைமுதல் பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று (நவ.14) ஒரு நாள் அடைய... மேலும் பார்க்க