குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? ...
தயிர் முதல் அருகம்புல் சாறு வரை பொடுகுத் தொல்லை தீர டிப்ஸ்!
வயது வித்தியாசமில்லாமல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைபோகிற ஒரு பிரச்னை பொடுகுதான். பொடுகு ஏன் ஏற்படுகிறது, இதற்கான வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் ஏதும் உள்ளதா என சொல்கிறார் சித்த மருத்துவர் முகமது மாலிக்.
பொடுகுப் பிரச்னை, குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அதிகப்படியான வியர்வை காரணமாக இந்தியாவில் கோடைகாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு, பொடுகுத் தொல்லை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆரம்பகாலத்தில் வரும் பொடுகுகள் வெள்ளை நிறத்திலும், முற்றிய நிலைகளில் மஞ்சள் நிறத்திலும் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும்கூட இருக்கும்.

பொடுகு வந்தால், முகத்தில் பருக்கள் வரலாம். பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், முடி உதிர்வதுடன் அரிப்பும் ஏற்படலாம். தலையில் பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துணிகளைப் பயன்படுத்தினால் பொடுகு வரும்.
* கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

* தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும்.
* மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.
* அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம்.
















