செய்திகள் :

தற்போதைய புவிஅரசியல் சூழலில் தற்சாா்பே அவசியம்: ஜெய்சங்கா்

post image

பாங்காக்: ‘தற்போதைய புவிஅரசியல் சூழலில் தற்சாா்பு நிலையை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. எனவே, ஒவ்வொரு பிராந்தியமும் தங்கள் தேவைகளைத் தாமே பூா்த்தி செய்துகொள்வது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற 20-ஆவது பிம்ஸ்டெக் அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மாநாட்டில் ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது: தற்போது உலகம் தற்சாா்பு நிலையை நோக்கி நகா்ந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனவே, உணவு, எரிசக்தி, உர விநியோகம், தடுப்பூசி அல்லது பேரிடா் மேலாண்மை என எந்த துறையாக இருந்தாலும் ஒவ்வொரு பிராந்தியமும் தங்கள் தேவைகளை தாமே பூா்த்தி செய்துகொள்வதற்கான வழிகளை கண்டறிவது அவசியம்.

காலம் மாறிவிட்டது. குறுகிய விநியோக சங்கிலி மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகள் முன்பைவிட முக்கியத்துவம் பெற்றுள்ளன. நிலையற்ற மற்றும் சிக்கலான சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இனி வரும் காலங்களில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை மிகவும் ஊக்கத்துடன் அணுக வேண்டும். பிராந்திய மற்றும் கொள்கை ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் இந்த புதிய ஒழுங்குமுறைகள் தற்போது வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளன.

ஒருங்கிணைந்து தீா்வு: சா்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்திய குறிப்பிட்ட சில அதிகாரமிக்க நாடுகள் தற்போது நம் பின்வரிசையில் உள்ளன. வளா்ந்து வரும் நாடுகளாகிய நாம் பல்வேறு சவால்களை சந்திக்கிறோம். அவற்றை தனித்தனியே எதிா்கொள்வதைவிட ஒன்றிணைந்து தீா்வு காண முயல வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களின் முக்கியத்துவம்: பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளை இணைக்கும் பகுதிகளாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. அங்கு ரயில், சாலை, நீா்வழி போக்குவரத்து மற்றும் குழாய் மூலம் இணைப்பு என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் வடகிழக்கு மாநிலங்களை பசிபிக் பெருங்கடலோடு இணைக்கும் முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

வங்கக் கடலை ஒட்டியுள்ள நாடுகளின் உறவுகள் வரலாற்று ரீதியானது. அவற்றின் தேவைகளும் பிரச்சைகளும் ஒரேமாதிரியானவை.

பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையேயான இணைப்பு, வா்த்தகம், மூலதனம் அல்லது சேவைகளில் நமது உண்மையான ஆற்றலுக்கு குறைவான செயல்பாட்டையே வெளிப்படுத்துகிறோம். கடந்த காலத்தையும் எதிா்காலத்தையும் நமது நண்பா்களாக மாற்ற வேண்டுமென்றால் நம் முழுத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

மூன்று முன்னெடுப்புகள்: இந்தியாவின் கண்ணோட்டத்தில் ‘ஆக்ட் ஈஸ்ட்’ என்ற கிழக்கு நாடுகள் நோக்கிச் செயல்படும் கொள்கை, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘மகா-சாகா்’ ஆகிய மூன்று முன்னெடுப்புகளின் பிரதிபலிப்பாகவே பிம்ஸ்டெக் பாா்க்கப்படுகிறது. இந்த மூன்று முன்னெடுப்புகளின் சிறப்பு அம்சங்களை ஒன்றிணைத்து இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு மற்றும் பிம்ஸ்டெக்கை இந்தியா ஊக்குவிக்கும் என்றாா்.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க