தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிவைத்த நிலையில், அதில் கையெழுத்திட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த்துடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளார்.
இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
இந்த விழாவின் தொடக்கத்தில் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கெட் அவுட் என்ற பெயரில் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, இரண்டாவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கையெழுத்திட்ட நிலையில், மூன்றாவதாக பிரசாந்த் கிஷோரை கையெழுத்திட ஆதவ் அர்ஜுன் அழைத்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவாக செயல்படுவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.