செய்திகள் :

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

post image

தவெக மாநாடு நடைபெறும் மதுரை பாரபத்தியில் கடும் வெயில் தகிப்பதால் தொண்டர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இப்போதே சுமார் 2 லட்சம் பேர் குவிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் காலையிலேயே மாநாட்டுக்கு வந்திருந்த பல தொண்டர்களும் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது. குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் அழுதுகொண்டே இருந்தன.

ஏற்கனவே, மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி விட்டதால், சாலையிலேயே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டால்தான், மேற்கொண்டு வாகனங்கள் முன்னேறும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தொண்டர்கள் மீது டிரோன்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது. ஆனால், கொளுத்தும் வெயிலில் தெளிக்கும் தண்ணீர் ஆவியாகிப் போனது.

நாலாபுறமும் இருந்து வரும் தொண்டர்களுக்கு இடமளித்து அமர வைக்கவும், வெய்யிலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் குடிநீர் கிடைக்காமல் ஆத்திரமடைபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் தவிப்பதாகவும் தெரிகிறது.

காலையில் இருந்தே ஏராளமானோர் மாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாநாட்டுத் திடலுக்கு அருகே அவசர மருத்துவ வாகன சேவைக்கான சைரன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொண்டர்கள் அமர மண் தரையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகளை கிழித்து தற்காலிக கூடாரம் அமைத்து தொண்டர்கள் தஞ்சமடைந்தனர். நாற்காலிகளை தலைக்கு மேல் குப்புறக் கவிழ்த்துக்கொண்டு குடையாக பிடித்துக் கொண்ட தொண்டர்களையும் பார்க்க முடிகிறது.

மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கடும் வெப்பம் தகிப்பதால், தொண்டர்கள் அமர முடியாமல் உள்ளது.

மேலும், விஜய் மாநாட்டுக்குள் வரும்போது, தொண்டர்கள் இரும்பு வேலி மீது ஏறி உள்ளே குதித்து விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக, இரும்பு வேலிகளுக்கு க்ரீஸ் பூசுப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், தவெக மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா, எம்ஜிஆர், கேப்டன்.. தவெக மாநாட்டில் குறிப்பிடப்பட்ட திராவிடத் தலைவர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய திராவிட கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றது. மதுரையில் நடைபெறும் தவெக-வின், 2-வது மாநில மாநாட்டில் இசையமைப்... மேலும் பார்க்க

கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக! விஜய் பேச்சு

பாரபத்தி: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று குறிப்பிட்டார் கட்சித் தலைவர் விஜய்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கி ... மேலும் பார்க்க

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்: விஜய்

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும், வேடிக்கைப் பார்க்க வராது என்று தவெக மாநாட்டில் விஜய் பேசினார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாது... மேலும் பார்க்க

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திர... மேலும் பார்க்க

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை அ... மேலும் பார்க்க