Shreyas Iyer: 'இந்திய டி20 அணியில் இடம்பெற ஸ்ரேயஸ் வேறு என்ன செய்ய வேண்டும்?' - ...
தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!
திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் பலரும் கலைந்து செல்லத் தொடங்கினர்.
விழா இன்று மாலைதான் தொடங்கும் என்றாலும், முன்கூட்டியே காலையில் இருந்து ஏராளமான மக்கள் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்.
கடும் வெயில் காரணமாக அவதிக்குள்ளாகி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜயை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தது போல, அவரைப் பார்த்து, அவர் நடைமேடையில் நடந்து செல்வதைப் பார்த்து கோஷம் எழுப்பிய நிலையில், விழா தொடங்கியதுமே அவர்களும் புறப்படத் தொடங்கிவிட்டனர்.
இதுவரை திடல் முழுமையாக நிரம்பியிருந்த நிலையில், விழா தொடங்கியதும் பல இடங்கள் காலியாகிவிட்டன். சாலைகளில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் பாரபத்தி திடலை விடவும் வெளியே கூட்டம் அலைமோதுவது போல காணப்படுகிறது.