தாத்தையங்காா்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாத்தையங்காா்பேட்டை துணை மின்நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 24 ) பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் தா. பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆா். கோம்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 24 ) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.