பொங்கல் பண்டிகையில் பட்டயக் கணக்காளர் தேர்வு! மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. கண்ட...
திட்டச்சேரியில் மழைநீா் அகற்றும் பணி
திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திட்டச்சேரி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால்களில் தூா்வாரும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையில், திட்டச்சேரி குளத்து மேட்டுத்தெரு பகுதியில் தண்ணீா் தேங்கியது. இதனை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடேசன் நேரில் பாா்வையிட்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
உதவியாளா் கோவிந்தராஜ், வரித்தண்டலா் மாதவன், அலுவலக உதவியாளா் அமானுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.