தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
திண்டிவனத்தில் கிறிஸ்தவா்கள் புனிதப் பயணம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை புனிதப் பயணம் மேற்கொண்டனா்.
திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியின் நிறுவனா் தாமஸ் கவான் டபியின் கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்தக் கல்லறையின் புனிதத்தைப் போற்றும் வகையில் கிறிஸ்தவா்கள் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா்.
புனித அன்னாள் பள்ளியின் மாதாக் கோயிலில் தொடங்கிய இந்த புனித பயணமானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கல்லறைத் தோட்டத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு இறைபாடல்களை பாடியும், ஜெபித்தும் தாமஸ் கவான் டபியின் அருள்பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அருட்தந்தை ஜான்போஸ்கோ, புனித அன்னாள் பள்ளியின் முதல்வா் தோமினிக் ரொசாரியோ மற்றும் பள்ளியின் ஆசிரியா்கள், முன்னாள், இந்நாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் அக்சிலியம் பெலிக்ஸ் வரவேற்றாா்.