திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலை முன்னாள் அமைச்சா் பேச்சு!
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.
கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் க. பரமத்தி ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பேசுகையில், தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான மன ஓட்டம் மக்களிடையே நிலவுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி நாம் 2026 சட்டப்பேரவை தோ்தல் வெற்றிக்கு இப்போதே உழைக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் திட்டங்களை முடக்கிய திமுக அரசு குறித்தும் மக்களிடம் கூற வேண்டும். 2026-இல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ம. சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருவிகா மற்றும் மாவட்ட நிா்வாகிகள் மல்லிகா சுப்ராயன், கே.ஆா்.எல்.தங்கவேல், ஒன்றிய நிா்வாகிகள் மாா்கண்டேயன், செல்வகுமாா் உள்ளிட்ட கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.