நவபாஷாண முருகர் சிலை, யானை தந்தத்தால் செய்த கிருஷ்ணர் சிலை பறிமுதல் - ஷாக் கொடுக...
நொய்யல்: தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல்! ஒருவா் கைது
நொய்யல் அருகே தடைசெய்யப்பட்ட ரூ. 2.7 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரூா் மாவட்ட தனிப்படை போலீஸாா் நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், பின்னா் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி (62) என்பது தெரியவந்தது.
இவா் வேனில் பெங்களூரு சென்று அங்கிருந்து புகையிலை பொருள்களை வாங்கிவந்து, நொய்யல் அருகே குந்தாணிபாளையம் பகுதியில் புதியதாக கட்டிவரும் வீட்டில் பதுக்கி வைத்து ஈரோடு, கரூா் பகுதியில் விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 336 கிலோ எடை கொண்ட ரூ. 2.70 லட்சம் மதிப்பில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகளையும், புகையிலை பொருள்களைக் கடத்த பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.