செய்திகள் :

`திமுக நீர் மோர் பந்தலுக்காக குப்பை வண்டியில் சென்ற குடிநீர்' - அதிர்ச்சி வீடியோ, வலுக்கும் கண்டனம்

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கடந்த 40 நாள்களுக்கும் மேலாக இந்த நீர்மோர் பந்தல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து நீர்மோர் பந்தலுக்குப் பயன்படுத்தும் குடிநீரை துப்புரவுப் பணியாளர்கள் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் துப்புரவு ஊழியரிடம் எதற்காக தண்ணீர் பிடிக்கிறீர்கள் என ஒருவர் கேட்கிறார். நீர்மோர் பந்தலுக்காக பேரூராட்சித் தலைவர் அறிவுறுத்தல்படி, தண்ணீர் பிடித்துச் செல்வதாக கூறுகிறார்.

நீர்மோர் பந்தலுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்காமலும், சுகாதாரமற்ற முறையில் குப்பை வண்டியில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதற்கும் கண்டன குரல்கள் எழத் தொடங்கி உள்ளன.

சுகாதாரமற்ற குடிநீர்

இதுதொடர்பாக சாமளாபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசுகையில், "சாமளாபுரத்தில் திமுக சார்பில் திறக்கப்பட்ட இந்த நீர்மோர் பந்தலில் ஊற்றப்படும் மோரை அவ்வழியே சென்று வரும் தொழிலாளர்களும், குழந்தைகளும், முதியவர்களும்தான் அதிக அளவில் குடிக்கின்றனர்.

இதற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தாமல் பொதுக் குழாயில் இருந்து வரும் நீரை பிடித்து, அதை குப்பை அள்ளும் வண்டியில் வைத்து மோரைக் கலந்து மக்களுக்கு கொடுக்கின்றனர்.

இதனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியின் தனிப்பட்ட செயல்பாடுக்கு அரசு வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளனர். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை" என்றனர்.

இதுதொடர்பாக சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமியிடம் விளக்கம் பெற பலமுறை முயற்சித்தோம். அவரது செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அரசியல் கட்சியின் தனிப்பட்ட செயல்பாட்டுக்காக அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதும், சுகாதாரமற்ற குடிநீரை குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சாமாளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமாரிடம் கேட்டோம். "திமுக-வின் நீர்மோர் பந்தலுக்காக பேரூராட்சியின் குப்பை அள்ளும் வண்டியில் வைத்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது உண்மைதான்.

இதுதொடர்பாக வீடியோ வெளியான பின்புதான் எனக்கு இந்த விசயம் தெரியவந்தது. என்னிடம் தகவல் தெரிவிக்காமல் தற்காலிக துப்புரவுப் பணியாளர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணியிடை நீக்கம் செய்யவுள்ளோம். சுகாதாரமற்ற தண்ணீரை நீர்மோர் பந்தலுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக அந்த நீர்மோர் பந்தலில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுக் குழாயில் இருந்து சுகாதாரமற்ற தண்ணீரை எடுத்துவர உத்தரவிட்ட சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்காமல், தற்காலிக துப்புரவுப் பணியாளர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க