செய்திகள் :

திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர்: அண்ணாமலை

post image

திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடா்ந்து, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் அமைச்சா் மூா்த்தி தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்கும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனா். இந்த நிலையில் அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்கிறார்.

இதையும் படிக்க: முதல்வா் இன்று அரிட்டாப்பட்டி வருகை! பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பு வெளியாகுமா?

இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முதல்வர், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்தியா கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தில்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உள்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்னைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் பிறந்த நாள்: டிரெயின் படத்தின் சிறப்பு விடியோ!

ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நரேன் ஆ... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல்: சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை!

சென்னை மற்றும் திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் சென்னைக்கு திரும்பும்போதும் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன ந... மேலும் பார்க்க

தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் அரசின் நோக்கமா? - அண்ணாமலை

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடை... மேலும் பார்க்க

'எமக்குத் தொழில் ரொமான்ஸ்': ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அசோக் செல்வன் - அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்பட... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்!

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.எண்ணூர் ரயில் நிலைய மேலாளர் அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,"தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை ... மேலும் பார்க்க